உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய் கடித்து 17 பேர் அட்மிட்

நாய் கடித்து 17 பேர் அட்மிட்

ஆத்துார்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர், செல்வகுமாரி, 35. இவர் நேற்று மாலை, 5:00 மணிக்கு வீட்டின் வெளியே துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது ரத்தம் சொட்ட, சொட்ட வந்த ஒரு நாய், செல்வகுமாரியை கை பகுதியில் கடித்து குதறியது. விரட்டியபோதும் தொடர்ந்து கடித்-தது.அதே நாய், ஒண்டிக்கடையில் விவசாயத்தோட்டத்தில் பூக்கள் எடுத்துக்கொண்டிருந்த தனலட்சுமி, 39, அபிராமி, 27, மற்றும், 5 வயது சிறுவன் உள்பட, 5 பேரை அடுத்தடுத்து கடித்தன. இவர்கள் கை, கால், விரல் பகுதிகளில் காயம் அடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் 10 பேர், ஆத்துார், சேலத்தில் உள்ள, தனியார் மருத்து-வமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆத்துாரை சேர்ந்த இருவர் என நேற்று ஒரே நாளில், 17 பேர் நாய் கடித்ததாக, அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தெருநாய்கள் வெறி நாய்களாக மாறி கடித்து வருவதால் கட்டுப்படுத்த வேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி