உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலி

ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலி

ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலிசேலம்:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கைலாசம்பாளையத்தை சேர்ந்தவர் மாதம்மாள், 60. இவர் நேற்று காலை பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில், இரு மகன்கள், பேரன்களுடன் சென்றுகொண்டிருந்தார். ரயில் சேலம் வந்தபோது மாதம்மாள் மயங்கி விழுந்தார். ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், மருத்துவர்களுடன் வந்தனர். பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரிந்தது.அதேபோல், மேற்கு வங்கத்தில் இருந்து கட்டட வேலைக்கு, 9 பேர், திப்ரூகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். காட்பாடி அருகே வந்தபோது, முஜிபூர் ரகுமான், 42, என்பவர் மயக்கம் அடைந்து இறந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை