உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2,366 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் உதவி

2,366 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் உதவி

சேலம்: சென்னையில், அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வில் துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் உன்னத திட்டம், கழிவுநீர் அகற்றும் நவீன வாகனங்களை வழங்கி, முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பல்வேறு துறைகள் சார்பில், 2,366 பயனாளிகளுக்கு, 4.05 கோடி ரூபாய் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவ-ருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவை பரிமாறிய அமைச்சர், அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். கலெக்டர் பிருந்-தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி