உர கட்டுப்பாடு ஆய்வகத்துக்கு66 மாதிரிகள் அனுப்பிவைப்பு
உர கட்டுப்பாடு ஆய்வகத்துக்கு66 மாதிரிகள் அனுப்பிவைப்புசேலம்:மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு தேவையான இடுபொருட்களை, வேளாண் துறை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்படும் இடுபொருட்களின் தரத்தை அறிய, பெரம்பலுார் மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுவினர், சேலம் மாவட்டத்தில் வேளாண் விற்பனை மையம், துணை வேளாண் விற்பனை மையங்களில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 66 மாதிரிகள் எடுத்து கோவையில் உள்ள உர கட்டுப்பாடு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். குறைபாடு, முறைகேடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என, சேலம் மாவட்ட தர கட்டுப்பாடு உதவி இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.