எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் மாணவ, மாணவியர் அசத்தல்
சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். அஸ்தம்பட்டி சந்திப்பு, அம்மா உணவகம் வழியே சென்று, சேலம் டி.ஐ.ஜி., அலுவலக பகுதியில் போட்டி நிறைவடைந்தது. அரசு, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், செஞ்சுருள் சங்க மாணவர்கள் பங்கேற்றனர். அதில் மாணவர்கள் முறையே தனுஷ், விக்னேஷ், தயாசேகர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவியரில் மீனாட்சி, கவுரி, ஸ்வேதா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.அவர்களுக்கு முறையே, 10,000, 7,000, 5,000 ரூபாய் வீதம் பரி-சுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. தவிர, 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட எய்ட்ஸ் திட்ட மேலாளர் அருணாசலம் கூறுகையில், ''தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் சார்பில் ஆக., 12 முதல், அக்., 12 வரை, எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடர்பாக, மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி மாரத்தான் நடந்தது. அதில் வென்-றவருக்கு விரைவில் பரிசளிப்பு விழா நடத்தப்படும்,'' என்றார்.மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குனர் சவுண்டம்மாள், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.