மலைப்பாதையில் விழுந்த 3 மரங்களால் ட்ராபிக் ஜாம்
ஏற்காடு: ஏற்காட்டில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, மலைப்பாதையில் உள்ள, 60 அடி பாலம் அருகே பெரிய மரம் சாலை குறுக்கே விழுந்தது. தொடர்ந்து அதன் அருகே இருந்த இரு மரங்களும் அதனுடன் சேர்ந்து சாலை குறுக்கே விழுந்தது. அதிஷ்டவசமாக வாகனம் ஏதும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஏராளமான சுற்-றுலா பயணியர் வாகனங்கள் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. நெடுஞ்சாலை துறையினர், முதலில் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். தொடர்ந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மதியம், 3:00 மணிக்கு, மரங்கள் முழு-தையும் அகற்றினர்.