மேலும் செய்திகள்
மொபட் மீது கார் மோதி மேள தொழிலாளி பலி
23-Aug-2024
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார், சந்தைபேட்டை தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பன், 65. இவர் நேற்று, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டில், சொக்கனுாரில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார். மதியம், 3:00 மணிக்கு அங்கிருந்து வீர-கனுார் நோக்கி மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்-போது சொக்கனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், 48, அவரது மனைவி சித்ரா, 46, ஆகியோரும், 'எக்ஸ்.எல்.,' மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர்.தென்கரையில் இரு மொபட்டுகளும் நேருக்கு நேர் மோதின. இதில், 3 பேரும் படுகா-யமடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்-பப்பட்டனர். அதில் கருப்பன் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்ஆத்துார் அருகே கோபாலபுரத்தை சேர்ந்த, சரவணன் மகன் சுரேஷ்குமார், 28. கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை, 11:30 மணிக்கு, 'பல்சர்' பைக்கில், மல்லியக்கரை நோக்கிச்சென்-றுகொண்டிருந்தார். அந்த வழியே வந்த, 'ஈச்சர்' மினி டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில் சுரேஷ்குமார், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார், லாரியை விட்டு தப்பியோடிய டிரைவரை தேடுகின்றனர்.
23-Aug-2024