உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வக்கீல்கள் உண்ணாவிரதம்

வக்கீல்கள் உண்ணாவிரதம்

வக்கீல்கள் உண்ணாவிரதம்மேட்டூர்:வக்கீல்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுதல்; வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றுதல்; சேம நல நிதியை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3ம் நாளாக நேற்று, மேட்டூர் அணை வக்கீல் சங்கம் சார்பில், அங்குள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. துணைத்தலைவி மாலதி தலைமை வகித்தார். செயலர் மனோகரன் முன்னிலையில் மூத்த வக்கீல்கள் உள்பட பலர், போராட்டத்தில் பங்கேற்றனர். காலை, 9:30 முதல், மாலை, 4:00 மணி வரை போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !