தீ தொண்டுவாரம் அனுசரிப்பு
தீ தொண்டுவாரம் அனுசரிப்புநாமக்கல்:ஆண்டுதோறும் ஏப்., 14 முதல், 20 வரை, 'தீத்தொண்டு வாரம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில், தீ விபத்தில் இறந்த பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.அதன்படி, நேற்று நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், தீ விபத்தில் இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்து, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் தவமணி, தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். 'தொடர்ந்து, ஏழு நாட்கள் தீ விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்' என, அலுவலர்கள் தெரிவித்தனர்.