உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகாபாரத வரலாறு சொற்பொழிவு

மகாபாரத வரலாறு சொற்பொழிவு

மேட்டூர்:கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி பாலவாடியில் உள்ள மாயவ பெருமாள் ஆலயத்தில் கடந்த மாதம், 17ல் கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு தொடங்கியது. கோட்டையூர் தங்கவேலு, மகாபாரத வரலாறு குறித்த சொற்பொழிவு நடத்தினார். தொடர்ந்து, 18 நாட்கள் நடந்த பாரத போர் குறித்த சொற்பொழிவு, கடந்த, 3ல் ஆடிப்பெருக்கு நாள் வரை நடந்தது. நேற்று இரவு, 8:00 மணிக்கு மகாபாரத போர் முடிந்த பின், கிருஷ்ணர், பாண்டவர்கள் வைகுந்தம் செல்லும் நிகழ்வுடன், சொற்பொழிவு நிறைவு பெற்றது. ஏராளமான பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை