அவரை கிலோ ரூ.120
தலைவாசல், அவரை செடிகளில், செடி அவரை, கொடி அவரை என இரு வகைகள் உள்ளன. ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில், இரு வகை அவரைகளும் சாகுபடி செய்யப்படுகிறது. வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த அவரை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழையால் அவரை செடியில் உள்ள பூக்கள் உதிர்ந்து வருகின்றன. இதனால் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் அவரை வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ, 70க்கு விற்ற அவரைக்காய், நேற்று, 120 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனையில், கிலோ, 130 முதல், 140 ரூபாய் வரை விற்பனையானது.