உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவி உள்பட2 பேர் மாயம்

மாணவி உள்பட2 பேர் மாயம்

மாணவி உள்பட2 பேர் மாயம்சேலம்சேலம், அரிசிபாளையம் நாகலிங்கம் தெருவை சேர்ந்த கவிதா மகள் தீபிகா, 19. தனியார் ஓட்டலில் பணிபுரிகிறார். இவருக்கும், ஓட்டல் மேலாளருக்கும் இடையே, கடந்த, 6ல் தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த தீபிகா, ஓட்டலில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. கவிதா எங்கு தேடியும் காணாததால், பள்ளப்பட்டி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார், தீபிகாவை தேடுகின்றனர்.அதேபோல், கருப்பூர், தேக்கம்பட்டியை சேர்ந்த பரிமளா மகள் அனுஷா, 19. தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 7ல் கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. பரிமளா நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை