உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொண்டாரெட்டீஸ் அலைக்கழிப்புவரும் 25ல் போராட்டம் நடத்த முடிவு

கொண்டாரெட்டீஸ் அலைக்கழிப்புவரும் 25ல் போராட்டம் நடத்த முடிவு

'கொண்டாரெட்டீஸ்' அலைக்கழிப்புவரும் 25ல் போராட்டம் நடத்த முடிவுமேட்டூர்:தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், கொண்டாரெட்டீஸ் பழங்குடியின நலச்சங்கம் சார்பில், மண்டல சிறப்பு பேரவை கூட்டம் கொளத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது. மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லிபாபு தலைமை வகித்தார். மேட்டூர், கொளத்துார் சங்க தலைவர் வேணுகோபால், செயலர் அண்ணாதுரை, பொருளாளர் ரதிரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து டில்லிபாபு கூறியதாவது: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் உத்தரவுப்படி, 80 பேரின் சான்றிதழ்களை சரிபார்க்கிறோம் எனக்கூறி, கொண்டாரெட்டீஸ் மக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, வரும், 25ல் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ