மேலும் செய்திகள்
ஒரே குடும்பத்தில் 3 பேர் துாக்கிட்டு தற்கொலை
29-Jan-2025
3 பேர் தற்கொலைகந்துவட்டி காரணம்?சேலம்:சேலம், அரிசிப்பாளையம், முத்தையாளு தெருவை சேர்ந்த பால்ராஜ், அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகியோர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பால்ராஜ் எழுதிய, 3 பக்க கடிதத்தை கைப்பற்றி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கணவருக்கு தெரியாமல் ரேகா அதிக கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கந்து வட்டி வாங்கி, அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டனரா என, கடன் கொடுத்தவர்கள், உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
29-Jan-2025