உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைதுசேலம்:சேலம் டவுன் போலீசார், நேற்று முன்தினம் ஆற்றோர மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் சங்ககிரி, மேட்டுத்தெருவை சேர்ந்த வினோபாலன், 21, தாரமங்கலம் எம்.ஜி.ஆர்., காலனி கார்த்தி, 21, கோரிமேடு, ஆத்துக்காடு மணிகண்டன், 20, என்பதும், அவர்களிடம், 2 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். அதேபோல் வீராணம் போலீசார், வலசையூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, கிச்சிப்பாளையம், அசோக் நகரை சேர்ந்த முகமது யுனிஸ், 28, கீரைப்பட்டி வெங்கடேசன், 52, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ