புது ஆயக்கட்டு விவசாயிகள்60 சதவீத நீர் வழங்க எதிர்ப்பு
புது ஆயக்கட்டு விவசாயிகள்60 சதவீத நீர் வழங்க எதிர்ப்புவாழப்பாடி:புழுதிக்குட்டை, ஆனைமடுவு அணை தண்ணீர் திறப்பதற்கான வரைவு விதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக, வாழப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமை வகித்தார்.அதில் பழைய ஆயக்கட்டு விவசாயிகள், 60 சதவீத நீர் வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு புதிய ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே கரியகோவில், கைக்கான்வளவு திட்டத்தில் நீராதாரம் உள்ளதால், எங்களுக்குத்தான் அதிகளவில் வழங்க வேண்டும் என கூறினர். வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.