உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழப்பாடி அருகே சாலை விபத்தில் தம்பதி பலி

வாழப்பாடி அருகே சாலை விபத்தில் தம்பதி பலி

வாழப்பாடி:சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, படையாச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர், கூலித் தொழிலாளி முருகன், 58. இவர், தனது மனைவி பொன்னம்மாள், 54, இருவரும் மொபட்டில் உறவினர் வீட்டிற்கு சென்றார்.அப்போது, வாழப்பாடியில் அடுத்த, சேசன்சாவடி பஸ் ஸ்டாப் பகுதியில், சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ரெக்கவரி வாகனம் எனும் மீட்பு வாகனம், மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை