உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்டு ஈரலை வறுத்து சாப்பிட்ட பெண் பலி

ஆட்டு ஈரலை வறுத்து சாப்பிட்ட பெண் பலி

சேலம்: சேலம், இரும்பாலை அருகே, வட்டமுத்தம்பட்டியை சேர்ந்த தொழிலாளி முருகன் மனைவி லட்சுமி, 45; நேற்று முன்தினம் மதியம், வீட்டருகில் உள்ள ஒரு ஆட்டிறைச்சி கடையில், ஆட்டு ஈரல் (செவ்ரொட்டி) வாங்கி வந்து வறுத்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தவித்தார். உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது-குறித்து இரும்பாலை போலீசார் விசாரித்தனர். 'செவ்ரொட்டியை' தணலில் வாட்டி அல்லது சுட்டு சாப்பிடுவார்கள். ஆனால், லட்-சுமி வறுத்து சாப்பிட்டதால், மூச்சுக்குழாய் அல்லது தொண்-டையில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம். அதே-சமயம் உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, சாவுக்கான காரணம் தெரிய வரும் என்று, போலீசார் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை