மேலும் செய்திகள்
பரதநாட்டியம் அரங்கேற்றம்
04-Feb-2025
சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சேலம் மாவட்ட பரத நாட்டிய ஆசிரியர் சங்கம் சார்பில், 5ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, அஸ்தம்பட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் லதா வர-வேற்றார். மருத்துவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அதில், பல்வேறு பள்ளிகளில் பரதநாட்டியம் பயிலும், 300க்கும் மேற்பட்ட மாணவியர், பரதநாட்டியம் ஆடி திறமையை வெளிப்-படுத்தினர். அதில் சிறப்பாக ஆடிய மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. அனைத்து நடன ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
04-Feb-2025