உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் பறவைகள்கணக்கெடுப்பு

ஏற்காட்டில் பறவைகள்கணக்கெடுப்பு

ஏற்காட்டில் பறவைகள்கணக்கெடுப்புஏற்காடு:சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சேர்வராயன் வனச்சரக நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி, ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு தொடங்கியது. ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன் தலைமை வகித்தார். 3 குழுவினர், கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.ஒவ்வொரு குழுவிலும் வன ஊழியர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என, 15 பேர் இருந்தனர். மாலை, 6:30 மணி வரை கணக்கெடுப்பு நடந்தது. அதில் சன்னியாசி காப்புக்காட்டில், 44, வாணியாரில், 51, நாகலுாரில், 35, காவேரி பீக்கில், 41 ரக பறவைகளை கண்டறிந்ததாக, வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்தியன் ப்ளூ ராபின், மலபார் விசிலிங் திரஸ் உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ