சத்தாபரண ஊர்வலம்
ஏற்காடு, லாங்கில்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று இரவு, 8:00 மணிக்கு, சத்தாபரண ஊர்வலம் நடைபெற்றது. கோவிலில் தொடங்கிய ஊர்வலம், ஏற்காடு டவுன், பஸ் ஸ்டாண்ட், ஜெரீனாக்காடு வழியே சென்று நள்ளிரவு மீண்டும் கோவிலை அடைந்தது. இதில், மலர், மின்விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்த அம்மனை, வழி நெடுக பக்தர்கள் வழிபட்டனர். மேலும் ஊர்வலத்தின்போது, பக்தர்கள் நடனமாடிய படியே சென்றனர்.