உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சி.ஐ.டி.யு., தர்ணா

சி.ஐ.டி.யு., தர்ணா

சேலம், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே மெய்யனுார் பணிமனை முன், சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் செம்பன் தலைமை வகித்தார். அதில் போக்குவரத்து பொதுத்துறையை, அரசு, தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; காலி பணியிடங்களை விரைவில் நிரப்புதல்; இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மண்டல பொதுச்செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சேகர், அரசு விரைவு போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை பொது செயலர் முருகேசன், சி.ஐ.டி.யு., ஓய்வு தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ