மேலும் செய்திகள்
வட்டார கலைத்திருவிழா போட்டிகள் துவக்கம்
14-Oct-2025
சேலம், பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தி முடிக்கப்பட்டு, வட்டார அளவில் போட்டிகள் நடக்கின்றன. அதன்படி சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஊரக வட்டார அளவில் போட்டி நேற்று நடந்தது. 9 முதல், பிளஸ் 2 வரையான மாணவ, மாணவியருக்கு, நடனம், பாட்டு, கவிதை, ஓவியம் உள்பட, 34 வகை தலைப்புகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக கடந்த, 13, 14ல், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரையானமாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 114 பள்ளிகளை சேர்ந்த, 2,600 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள், மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.940 மாணவர்கள்தாரமங்கலம் வட்டார அளவில் கலைத்திருவிழா, அங்குள்ள செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினமும் நேற்றும் நடந்தது. 940 மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்தினர். வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர்.வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், இரு நாட்கள் கலைத்திருவிழா நேற்று தொடங்கியது. 32 வகை போட்டிகளில், மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர். இன்று பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.----------------------------
14-Oct-2025