மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
21-Jul-2026
சேலம்:சி.ஐ.டி.யு., சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்தல்; பணிக்காலத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை தாமதமின்றி வழங்குதல்; ஊழியர் ஊதியத்தில் பிடித்தம் செய்யும், பி.எப்., - இ.எஸ்.ஐ., கணக்கு காட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
21-Jul-2026