மேலும் செய்திகள்
ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல்
26-Nov-2024
மேட்டூர், டிச. 22-மேட்டூர் வட்ட கிராம பூசாரிகள் சமூக நல பேரவை சார்பில், 108 வேல் பூஜை பெருவிழா, மேட்டூர் ஆர்.எஸ்., பகுதியில் நேற்று நடந்தது.நிர்வாக அறங்காவலர் துரை.ரமேஷ் தலைமை வகித்தார். சேலம் ராஜராஜேஸ்வரி கோவில் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதி, வராகி அம்மன் கோவில் தண்டாயுதபாணி சுவாமி, தர்மபுரி சதாசிவானந்தா சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.அதில் வேத மந்திரங்கள் முழங்க, நோய் நீங்க, கடன் தீர, தொழில் சிறக்க, 108 பக்தர்கள், வேல் வைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். மேட்டூர், குமரன்குன்று, பாலமுருகன் கோவில் பூசாரி செல்வராஜ் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
26-Nov-2024