உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுத்தையை பிடிக்க மேலும் ௨ கூண்டு பயிற்சி பெற்ற 80 ஊழியர்களும் வருகை

சிறுத்தையை பிடிக்க மேலும் ௨ கூண்டு பயிற்சி பெற்ற 80 ஊழியர்களும் வருகை

மேட்டூர்: சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி பகுதியில் ஒரு வாரமாக திரியும் சிறுத்தை, 10 ஆடுகள், 3 கோழிகளை கொன்றுள்ளது. சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, நேற்று முன்தினமும் தின்னப்பட்டி விவசாயிகள், கொளத்துாரில் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து பயிற்சி பெற்ற ஊழியர், 80 பேர், தின்னப்பட்டி ஊராட்சிக்கு இரு கூண்டுகளுடன் நேற்று வந்தனர். மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க நான்கு மருத்துவர்களும் வந்துள்ளனர். ஏற்கனவே இரு கூண்டு வைக்கப்பட்ட நிலையில் தற்போது நான்காக உயர்ந்துள்ளது. சிறுத்தை நடமாட்டத்தை, 'டிரோன்' மூலம் கண்காணித்தனர். சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, தின்னப்பட்டியில் வனத்துறை ஊழியர்களுக்கு சிறுத்தையை பிடிக்க ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி