உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2,610 பேர் தபாலில் ஓட்டுகள் பதிவு

2,610 பேர் தபாலில் ஓட்டுகள் பதிவு

சேலம்:சேலம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில், 13,410 அலுவலர், கூடுதலாக மாற்று அலுவலர், 2,682 பேர் என, 16,092 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான, 2ம் கட்ட பயிற்சி, 11 சட்டசபை தொகுதிகள் வாரியாக தனித்தனி மையங்களில் நேற்று நடந்தது. அதில், 15,633 பேர் பங்கேற்றனர். இது, 97.14 சதவீதம். கடந்த, 24ல் நடந்த முதல்கட்ட பயிற்சியில், 1,761 பேர் வரவில்லை. அவர்களுக்கு, 'மெமோ' வழங்கி விளக்கம் கோரிய நிலையிலும், 2ம் கட்ட பயிற்சியில், 459 பேர் பங்கேற்கவில்லை.தேர்தல் பணி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சியின்போது தபால் ஓட்டுப்போடுவதற்கான படிவம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள், 2ம் கட்டப்பயிற்சி நிறைவு செய்த பின், படிவத்தை பூர்த்தி செய்து, அவர்களுடைய தபால் ஓட்டை பதிவு செய்தனர்.அதன்படி கெங்கவல்லி சட்டசபை தொகுதியில், 206 பேர், ஆத்துார், 301, ஏற்காடு, 396, ஓமலுார், 95, மேட்டூர், 386, இடைப்பாடி, 145, சங்ககிரி, 350, சேலம் மேற்கு, 237, வடக்கு, 274, தெற்கு, 174, வீரபாண்டி, 46 பேர் என, 2,610 தபால் ஓட்டுகள் பதிவாகின.அவற்றில் சேலம் லோக்சபாவுக்கு, 1,108, கள்ளக்குறிச்சி, 1,073, தர்மபுரிக்கு, 429 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. விடுபட்டவர்கள் வரும், 13, 16ல், தபால் ஓட்டுகளை பதிவு செய்யலாம். தவிர தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், வரும் 11, 12ல் தபால் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ