உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.26.33 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்

ரூ.26.33 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்

ரூ.26.33 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்கரூர்:சாலைபுதுார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 26 லட்சத்து, 33 ஆயிரத்து, 816 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கரூர் மாவட்டம் நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. 2,693 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 45.89 ரூபாய், அதிகபட்சமாக, 56.05, சராசரியாக, 55.55 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 761 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 39 ஆயிரத்து, 534 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய், 348 மூட்டைகள் வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 138.99, அதிகபட்சமாக, 143.69, சராசரியாக, 142.29, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 104.42, அதிகபட்சமாக, 139.19, சராசரியாக, 125.42 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 16,769 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 21 லட்சத்து 56 ஆயிரத்து, 401 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.எள் கருப்பு ரகம் ஒரு கிலோ ஒரே விலையாக, 198 ரூபாய், மஞ்சள் வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 102.99, அதிகபட்சமாக, 119.02, சராசரியாக, 116.16 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,630 கிலோ எடையுள்ள எள், நான்கு லட்சத்து, 37 ஆயிரத்து, 881 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 26 லட்சத்து, 33 ஆயிரத்து, 816 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி