உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 30 மாற்றுத்திறனாளிகளுக்குதலா 5 கிலோ அரிசி வழங்க

30 மாற்றுத்திறனாளிகளுக்குதலா 5 கிலோ அரிசி வழங்க

30 மாற்றுத்திறனாளிகளுக்குதலா 5 கிலோ அரிசி வழங்கல்ஏற்காடு:தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்க கூட்டமைப்பின் ஏற்காடு கிளை பெயர் பலகை, ஏற்காடு, ஒண்டிக்கடை ரவுண்டானாவில் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநில தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்து, பெயர் பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்று தருவது, அரசு வழங்கும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரியப்படுத்தி பயனடைய செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை செயலர் குமரேசன், ஏற்காடு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாலமுருகன், ஏற்காடு தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் கலா, மாலினி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ