4 கடைகளில் கைவரிசைகேமரா, பணம் திருட்டு
4 கடைகளில் கைவரிசைகேமரா, பணம் திருட்டுவாழப்பாடி,: வாழப்பாடி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜ், 38. வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் எதிரே, போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை, 9:00 மணிக்கு கடைக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு கேமரா, பணம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்தில் விசாரித்தனர்.அதேபோல் சிங்கிபுரத்தில், வாழப்பாடி - தம்மம்பட்டி நெடுஞ்சாலையோரம் உள்ள வசந்தின் எலக்ட்ரிக் கடை, மணிகண்டனின் பேன்சி ஸ்டோர், ஜெயகாந்தனின் டைலர் கடைகளிலும், பணம் கொள்ளைபோனது தெரிந்தது. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.