உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 ஆடுகள் மர்மச்சாவு; கேமரா பொருத்த உறுதி

4 ஆடுகள் மர்மச்சாவு; கேமரா பொருத்த உறுதி

மேட்டூர்: கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி கோவிந்தபாடி, நாகேஸ்வரி அம்மன் கோவில் அருகே வசிக்கும் விவசாயி மாரியப்பன். இவரது மனைவி பழனியம்மாள், 65. இவர், 4 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீடு அருகே ஆடுகளை கட்டி போட்டிருந்தார். நேற்று காலை பார்த்தபோது, கழுத்து, வயிற்றில் கடிக்கப்பட்ட நிலையில், 4 ஆடுகளும் செத்து கிடந்தன. ஆட்டை கடித்த மர்மவிலங்கு எது என்பது தெரியவில்லை. மேட்டூர் வனத்துறையினர், இறந்த ஆடுகளை பார்வையிட்டு, மர்ம விலங்கை கண்டுபிடிக்க, அப்பகுதியில் இரு இடங்களில் கேமரா பொருத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், இறந்த ஆடுகளுக்கு வனத்துறையிடம் இழப்பீடு பெற்று தருவதாக, விவசாயிடம் உறுதியளித்தார்.இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி; புகார் அளிக்க போலீஸ் அறிவுறுத்தல்சேலம்: சேலம், ஸ்வர்ணபுரி, அய்யர் தெருவில், 'ரீ கிரியேட் பியுச்சர் இந்தியா' பெயரில், திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேஷ், 35, வீடுகளுக்கு தேவையான, 'ஹோம் அப்ளையன்ஸ்' பொருட்களை விற்பனை செய்தார். அதில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால், 7 மாதங்களில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, ஏராளமானோரிடம் முதலீடு பெற்றார்.இந்நிலையில் அந்நிறுவனம் மூடப்படுவதாக கிடைத்த தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, அங்கிருந்த, 3 கோடி ரூபாய், 48 பவுன் தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜேஷ், நிறுவன இயக்குனர்களான, மற்றொரு ராஜேஷ், அவரது மனைவி சத்தியபாமா, ஹரிபாஸ்கர் ஆகியோரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். 4 பேரும் ஜாமின் கேட்டு, 'டான்பீட்' நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் பள்ளப்பட்டி போலீசார், அந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும்படி, மக்களுக்கு நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை