சிறுமியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியிடம் சில்மிஷம்வாலிபருக்கு 5 ஆண்டு சிறைசேலம், செப். 14-சேலம், செட்டிச்சாவடி, டால்மியா காலனியை சேர்ந்தவர் சிவா, 25. பெயின்டரான இவர், 2019 ஜன., 21ல், 14 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அவருக்கு, 5 ஆண்டுகள் சிறை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.