உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 7 கதவணைகளில்பீக்ஹவர் மின் உற்பத்தி

7 கதவணைகளில்பீக்ஹவர் மின் உற்பத்தி

7 கதவணைகளில்'பீக்ஹவர்' மின் உற்பத்திமேட்டூர்: மேட்டூர் அணை அடிவாரம் முதல், கரூர் வரை செக்கானுார், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி, வெண்டிபாளையம், சோளசிராமணி ஆகிய இடங்களில் காவிரி குறுக்கே கதவணை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு கதவணையிலும் தலா, 30 வீதம், 7 கதவணைகளில், 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.அதற்கு காவிரியில் அதிகபட்சம் வினாடிக்கு, 18,000 கனஅடி நீர் வெளியேற்ற வேண்டும். ஆனால், கடந்த, 28ல் வினாடிக்கு, 4,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்திறப்பு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதற்கேற்ப கதவணை நிலையங்களில் மின் உற்பத்தி படிப்படியாக குறைந்தது. ஒரு வாரமாக வினாடிக்கு, 500 கனஅடி நீர் அணையில் திறக்கப்படுகிறது. இருப்பினும் அதை தேக்கி, 'பீக்ஹவர்' எனும் மின் நுகர்வு அதிகரிக்கும் நேரமான, மாலை, 6:00 முதல், 9:00 மணி வரையில், 4,000 கன அடியாக வெளியேற்றப்படுகிறது.அதன் மூலம் ஒரு கதவணையில், 4 முதல், 6 மெகாவாட் வீதம், 28 முதல், 42 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !