உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏராளமானோர் பால் குட ஊர்வலம்

அம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏராளமானோர் பால் குட ஊர்வலம்

பெத்தநாயக்கன்பாளையம்: ஓலப்பாடி, மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை-யொட்டி, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்-வலமாக சென்று வழிபாடு செய்தனர்.பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஓலப்பாடி பகுதியில் விநா-யகர், மகாமாரியம்மன், செல்லியம்மன் கோவில்கள் உள்ளது. இக்கோவில்களில், ஆவணி மாத தேர்த்திருவிழா கடந்த 21ல், கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விநாயகர், மகாமாரியம்மன், செல்லியம்மன், கிருஷ்ணர், காளியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்று வந்தது.நேற்று, மகாமாரியம்மனுக்கு பால்குடம் ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடங்-களை தலையில் சுமந்து, மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்-கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக, ஓம் சக்தி.. பரா-சக்தி.. என்ற கோஷத்துடன் சென்றனர்.கோவிலை அடைந்தவுடன் பக்தர்கள், மகாமாரியம்மன் மீது பாலை ஊற்றி அபிஷேகம் செய்து, வழிபாடு செய்தனர். பெத்த-நாயக்கன்பாளையம், ஒட்டப்பட்டி, ஓலப்பாடி, தளவாய்பட்டி, வசந்தபுரம் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை