உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாய், மகனை கொல்ல முயற்சி ; வக்கீல் உள்பட 2 பேர் கைது

தாய், மகனை கொல்ல முயற்சி ; வக்கீல் உள்பட 2 பேர் கைது

ஆத்துார் : ஆத்துார் அருகே அரசநத்தம், ஆசாரிக்காட்டை சேர்ந்தவர் அஞ்சலம், 50. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த, வக்கீல் ஜெயக்குமார், 34, என்பவருக்கும் இடையே, விவசாய தட பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த பிப்., 13ல், மல்லியக்கரை போலீசில், அஞ்சலம் புகார் அளிக்க சென்றுவிட்டு, அவரது மகன் முத்துகுமாருடன், 'டியோ' மொபட்டில் சென்றனர். அப்போது ஜெயக்குமார் ஓட்டி வந்த 'ஆல்டோ' கார், மொபட் மீது மோதியதில், தாய், மகன் விழுந்தனர்.இதுகுறித்து முத்துக்குமார், மொபட் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றதாக, மல்லியக்கரை போலீசில் ஜெயக்குமார் மீது புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து, ஜெயக்குமாரை கைது செய்தனர். இதை அறிந்த அவரது உறவினர் செல்வராஜ், 53, ஸ்டேஷனுக்கு சென்று, சாட்சிகளாக வந்தவர்களுக்கு இடையூறு செய்ததோடு, விசாரித்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து அஞ்சலம் மகள் பிரேமாவிடம் தகராறு செய்தார். இதுகுறித்து பிரேமா, 24, புகாரில், பெண் வன்கொடுமை வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை