உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

ஆத்துார்: கூலமேடு கிராமத்தில், 50 லட்சம் ரூபாயில், இரண்டு மேல்-நிலை தொட்டிகள் அமைக்க பூமி பூஜை நடந்தது.ஆத்துார் அருகே, கூலமேடு மற்றும் பிள்ளையார்பாளையம் கிராமத்தில், நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், இரண்டு இடங்-களில் மேல்நிலை தொட்டி அமைக்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கதிர் அடிக்கும் களம் அமைக்க, 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான பூமி பூஜை பணிகளை நேற்று, ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன் தலைமையில் நடந்தது. கூலமேடு ஊராட்சி தலைவர் வெள்ளையம்மாள், முன்னாள் ஒன்றிய கவுன்-சிலர் பைத்துார் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை