மேலும் செய்திகள்
விலை உயர்ந்த 'பைக்'குகள் திருடியவருக்கு 'காப்பு'
22-Feb-2025
சேலம் : சேலம், வீராணம், பனங்காட்டை சேர்ந்தவர் காமராஜ், 37. இவர், கடந்த மாதம், 4 இரவு, 'யமஹா ஆர்.எக்ஸ்.100' பைக்கை வீடு முன் நிறுத்தியிருந்த நிலையில் திருடுபோனது. அதேபோல் வீமனுார் காட்டுவளவை சேர்ந்த ரமேஷ், 42, என்பவரது, யமஹா ஆர்.எக்ஸ்.135 பைக், கடந்த, 4ல் திருடுபோனது. இதுகுறித்து இருவரும் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, வீராணம் போலீசார் விசாரித்ததில், 15 வயது சிறுவன், சேலம், களரம்பட்டியை சேர்ந்த மோகனவேல், 22, உடையாப்பட்டி சிவசுப்ரமணி, 19, ஆகியோர் பைக்குகளை திருடியது தெரிந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், பைக்குகளை மீட்டனர். சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.
22-Feb-2025