உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.25 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் பில் கலெக்டர் குணசேகரன்!

ரூ.25 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் பில் கலெக்டர் குணசேகரன்!

ஆத்தூர்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி பில் கலெக்டர் குணசேகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=07rl40dx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக மக்கள் புகார் அளித்ததும், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும் கையும் களவுமாக பிடிப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு நகராட்சி பில் கலெக்டர் குணசேகரன், நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, ராமசாமி, லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரின் ஆலோசனைப்படி லஞ்சப் பணம் 25 ஆயிரம் ரூபாயை ராமசாமி கொண்டு சென்றார். அதை அவரிடம் இருந்து குணசேகரன் வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venkateswaran Rajaram
ஏப் 01, 2025 18:48

இவரை பார்த்தால் கஞ்சா வியாபாரி போல் தெரிகிறது


Azar Mufeen
மார் 05, 2025 23:14

சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரியே காசு வாங்கிக்கொண்டு பிராடு பண்ண தேசப்பற்று மாடலும் திராவிட மாடலும் ஒண்ணுதான்


தாமரை மலர்கிறது
மார் 05, 2025 20:08

கோட்டாவில் ஜொலிக்கும் திராவிட மாடல்.


Gokul Krishnan
மார் 05, 2025 19:34

ஊழல் ஒழிப்பு பற்றி எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக பேச தயார் இல்லை.மொழி மதம் ஜாதி இதை மட்டுமே முன் நிறுத்தி அரசியல் செய்கின்றன


Kasimani Baskaran
மார் 05, 2025 18:13

கொஞ்சநாள் சென்றபின்னர் உயர் பதவியில் அமர்த்தி தங்களுக்கு முகவராக ஆக்கிவிடுவார்கள்.


Karthik
மார் 05, 2025 21:02

Its upcoming duties..


Venkatesan Ramasamay
மார் 05, 2025 18:04

பில் கலெக்டர் பணம் லஞ்சம் வாங்கியதால் இன்றுமுதல் இவர் பணம் கலெக்டர் என்று எல்லோராலும் விலக்குமத்தள அடிச்சி வேறப்பெறு வச்சி அழைக்கப்படுவாய்


கத்தரிக்காய் வியாபாரி
மார் 05, 2025 18:04

அப்பா கேட்கிறார் மகன் கொள்ளை அடிக்கிறான்


Sampath Kumar
மார் 05, 2025 17:06

பில் கலெக்டர் அதான் காலெக்ஷனில் இறங்கி விட்டார் போல


Karthik
மார் 05, 2025 21:01

இது ஏதோ உள்குத்து போல.. அவர் தன் கடமையை தானே செஞ்சிருக்காரு..??


chinnamanibalan
மார் 05, 2025 17:03

கடை நிலைப் பணியாளர்கள் பல ஆயிரங்களிலும், இடை நிலைப் பணியாளர்கள் பல லட்சங்களிலும், மேல் நிலைப் பணியாளர்கள் பல கோடிகளிலும் அன்பளிப்பு என்ற பெயரில், அச்சமின்றி வாரிக் குவிக்கும் நிலை வந்து விட்டது.


Nagarajan D
மார் 05, 2025 16:53

எப்ப முதல்வரே இந்த ஊழல் ஊழியருக்கு பனி உயர்வும் இடமாற்றமும்?


Karthik
மார் 05, 2025 20:59

அடுத்த மாசமே அப்பாயின்மென்ட் வித் பிரமோஷன் கன்பர்ம். Dont worry Be happy..


சமீபத்திய செய்தி