. ரூ.8 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்
ஓமலுார் :ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. 61 மூட்டைகளில் கொப்பரையை, விவசாயிகள் கொண்டு வந்தனர். கிலோ, 140.10 முதல், 232.22 ரூபாய் வரை ஏலம் கோரினர். 20.45 குவிண்டால் மூலம், 4.24 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த, 18ல் நடந்த ஏலத்தில், கிலோ அதிகபட்சம், 235.99 ரூபாய் வரை ஏலம் கோரினர். அதேபோல் சேலம், உத்தமசோழபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம், கிலோ, 198 முதல் 225 ரூபாய்; இரண்டாம் தரம், 135 முதல் 160 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 4.24 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.