உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொடூர தாய்; காமுக டிரைவர் கைது

கொடூர தாய்; காமுக டிரைவர் கைது

ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த லாரி டிரைவர் குமரேசன், 50. இவர், அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி வகுப்பாசிரியையிடம் தெரிவித்தார். குழந்தைகள் உதவி மையத்துக்கு அளித்த புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்தனர். குமரேசனுக்கு, சிறுமியின் தாயுடன் பழக்கம் இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, பிப்., 17ல், வீட்டில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி, குமரேசன் பலமுறை பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. குமரேசன், சிறுமியின், 35 வயது தாய் ஆகியோர் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, இருவரையும் போலீசார்கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ