மேலும் செய்திகள்
தமிழில் பெயர் பலகை வைத்தால் பாராட்ட முடிவு
26-Aug-2024
ஓமலுார்: தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கம், 5வது கோட்ட பேரவை கூட்டம், ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுரேஷ் பேசினார்.தொடர்ந்து சங்க வெள்ளி விழா ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும்படி, வரும், 17ல் திண்டுக்கல்லில் நடக்க உள்ள மாநில மாநாட்டில், குடும்பத்துடன் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. கோட்ட செயலர் கலைவாணன்அந்தோனி, பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
26-Aug-2024