உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, சடையம்பட்டியை சேர்ந்தவர் பழனி, 50. இவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று காலை, 8:00 மணிக்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வனப்-பகுதிக்குள் சென்றார். அப்போது குட்டியுடன் வந்த கரடி, பழ-னியை கடித்து குதறியது.சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்தபோது படுகாயத்துடன் பழனி கிடந்தார். அவரை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கை, கால், தலை பகுதிகளில் அதிகளவில் காயம் இருந்ததால் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆத்துார் வனத்துறையினர், கரி-யகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி