உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி

ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி

சேலம்,:திருப்பத்துார் மாவட்டம், கிழக்கு பத்தனவாடி, கந்திலியை சேர்ந்த சக்திமகி, 22, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு, கோவை - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் நேற்று முன்தினம் பயணித்தார். டேனிஷ்பேட்டை - லோகூர் இடையே ரயில் சென்றபோது, கழிப்பறைக்கு சென்ற சக்திமகி தவறி விழுந்தார். படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சேலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை