ஆணைவாரியில் வெள்ளப்பெருக்கு
ஆத்துார்:ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணியர் செல்ல, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்வராயன்மலை, முட்டலில் உள்ள ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. கல்வராயன்மலையில் இரு நாட்களாக பெய்த கன மழையால், நேற்று காலை முதல், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வந்தது. மதியம், 3:00 மணிக்கு, வெள்ளப்பெருக்காக மாறி, செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியர் செல்ல, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.