உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குப்பைக்கு தீயால் புகை மூட்டம்

குப்பைக்கு தீயால் புகை மூட்டம்

கரூர் : சாலையோரம் குப்பைக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் மண்மங்கலம் அருகே சாலையோரம் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சாலைகளிலும் அதிகளவு நடக்கிறது. இதன் காரணமாக டூவீலர் ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், புகை மூட்டடத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க வேண்டும். அதேபோல், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை