சேலம்: இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம், தமிழக கிளை, 2024ல், சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயாளிகளுக்கு அதிகபட்ச செவிலியர்கள் கூந்தல் தானம் செய்யும் சாதனையை தொடங்கியுள்ளது. டாக்டர் ஆனி கிரேஸ் கலைமதி தலைமையில் நிர்வாக உறுப்பினர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவர்களின் நலனுக்கு தமிழகத்தில் பல்வேறு செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த ஆண்டு புற்றுநோயாளிகளுக்கு அதிகபட்ச செவிலியர்கள் கூந்தல் தானம் செய்தல் தலைப்பில், ஆசிய சாதனை புத்தகம், இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற ஒரு சாதனையை மண்டல ரீதியாக தொடங்கியுள்ளது. இந்நிகழ்வு, சேலம் கோகுலம் செவிலியர் கல்லுாரியில் நடந்தது. டாக்டர் தமிழரசி வரவேற்றார். கோகுலம் செவிலியர் கல்லுாரி மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்தார். 145 உறுப்பினர்கள், 17 நிறுவனங்களில் இருந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலம், 4ல், குறைந்தது, 20 செ.மீ., நீளம், அதற்கு மேலும் கூந்தல் தானம் செய்தனர். இயக்குனர் செல்லம்மாள், புற்றுநோய் மருத்துவ நிபுணர் வித்யா பேசினர். டாக்டர் ஜாய் கெசியா, காமினி சார்லஸ், சரவணன், கனகதுர்கா, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.