மேலும் செய்திகள்
பள்ளி வேன்கள் மோதல் 8 மாணவர்கள் காயம்
08-Aug-2024
ஆத்துார்: தலைமை ஆசிரியர் இழிவாக பேசுவதாக, மாணவ, மாணவியர் பேசிய வீடியோ குறித்து, கல்வி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புத்துார் அரசு தொடக்கப்பள்ளியில், 160 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அப்பள்ளி மாணவ, மாணவியர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில், 'தலைமை ஆசிரியர், தகாத வார்த்தையில் பேசுகிறார். தலை, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கிறார். கழுத்தை பிடித்து நெரிக்கிறார்' என பேசியிருந்தனர். இந்த வீடியோ குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ், தலைவாசல் வட்டார கல்வி அலுவலர் நந்தகுமார் ஆகியோர் நேற்று, தலைமை ஆசிரியர் திருமுருகவேள், மேலாண் குழு, மாணவ, மாணவியரிடம் விசாரித்தனர்.இதுகுறித்து திருமுருகவேளிடம் கேட்டபோது, ''மேலாண் குழுவில் குளறுபடி இருப்பதாக, தவறான தகவல்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் பரப்புகின்றனர். யாரையும் நான் தரக்குறைவாக பேசவில்லை. குழந்தைகளிடம் யாராவது இப்படி பேசுவார்களா? என் மீது தவறான தகவல்களை கூறி வருகின்றனர்,'' என்றார்.சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், ''வீடியோ தொடர்பாக, கல்வி அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதன் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.திருமுருகவேள், தலைவாசல் அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்தபோது, அவர் துாக்கி வீசிய பிரம்பு, மாணவி கண்ணில் விழுந்து பார்வை பாதிக்கப்பட்டது. இதில் அவர் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில்தான் புத்துார் அரசு தொடக்கப்பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இங்கும் அவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது.
08-Aug-2024