உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கர்நாடகா அணைகள் நீர்வரத்து சரிவு காவிரி, கால்வாய் பாசனத்துக்கு திறப்பு

கர்நாடகா அணைகள் நீர்வரத்து சரிவு காவிரி, கால்வாய் பாசனத்துக்கு திறப்பு

மேட்டூர்: கர்நாடகா அணைகளில் நீர்வரத்து சரிந்த நிலையில், காவிரி மற்றும் கால்வாய் பாசனத்-துக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்-ளது.கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணை-களின் மொத்த நீர்மட்டம், 65 அடி, 49.5 அடி-யாகும். இரு அணைகளின் மொத்த நீர் கொள்-ளளவு, 19.5 மற்றும் 49.5 டி.எம்.சி.,யாகும்.இரு அணைகளிலும் நேற்று முன்தினம் வினாடிக்கு, 8,025 கனஅடி, 11,729 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 8,702 கனஅடி, 11,248 கனஅடி என மொத்தம், 19,950 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. அணைகளில் இருந்து காவிரியில், 15,605 கன-அடி நீரும், கபினியில், 1,350 கனஅடி, கே.ஆர்.எஸ்.,ல், 2,110 கனஅடி நீர் கால்வாய் பாசனத்துக்கும் வெளியேற்றப்பட்டது.கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்துள்ளதால் வரும் நாட்-களில் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை