உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெட்ரோல் குண்டு வீச்சு மேலும் ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு மேலும் ஒருவர் கைது

ஓமலுார், ஓமலுார் அருகே காமலாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 24. பொட்டியபுரம், ஆசாரிப்பட்டறைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 21. நண்பர்களான இருவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன், இவர்கள் இடையே இடையே ஏற்பட்ட மோதலால் பிரிந்து விட்டனர். இந்த முன்விரோதத்தில், கடந்த, 10 நள்ளிரவில் இருவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வழக்கில் இருதரப்பிலும், 7 பேரை, ஓமலுார் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று, கருப்பூர், குள்ளக்கவுண்டனுாரை சேர்ந்த சாரதி, 19, என்பவரை, போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் கைது எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ