2,500 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
சேலம்: வரும், 7ல் விநாயகர் சதுர்த்தி, வீடுகள் மட்டுமின்றி, பா.ஜ., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட உள்ளன. சாலையோர பகுதிகளில் சிலைகள் அமைக்க போலீசாரிடம் அனுமதி பெற்று வருகின்றனர். சேலம் மாநகர் சார்பில், 1,500 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும், 7 காலை முதல், 8 வரை சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 8 மாலை, சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மூக்கனேரியில் கரைக்கப்படும். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மாநகர் போலீசார், தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடு பணி நடக்கிறது. பாதுகாப்புக்கு சேலம் மாநகர் சார்பில், 1,500 போலீசார் ஈடுபட உள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல் மாவட்டம் சார்பில் மேட்டூர், இடைப்பாடி, தம்மம்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 1,000 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, ஆற்றில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.